ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இன்று(டிச. 11) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அகதிகள் அமைச்சகத்தின் அலுவலகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அந்நாட்டின் அமைச்சர் கலீல் உர்-ரஹ்மான் ஹக்கானி கொல்லப்பட்டார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொது இடங்களில் கையில் துப்பாக்கி ஏந்தியபடியே வலம் வரும் ஹக்கானி கொல்லப்பட்டிருப்பது தலிபான் அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் அரசு, இது கோழைத்தனமான தாக்குதல் என்று விமர்சித்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதல்களில் அகதிகள் துறை அமைச்சர் கலீல் உர்-ரஹ்மான் ஹக்கானியுடன் சேர்த்து இன்னும் பலர் பலியானதாக அரசு தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
