
துல்கர் சல்மானின் இந்த லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து விட்டு, பணக்காரர்களாக திரும்புகிறேன் எனக்கூறி, 4 பள்ளி மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய, லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழ் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஆந்திராவில், பள்ளி மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பி ஓடுவதற்கும் இப்படம் வழிகோலியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிப்பேட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர். படத்தின் நாயகனை போன்று, பணம், கார், வீடு ஆகியவற்றை உடனடியாக சம்பாதிக்கும் வேட்கையில், 4 மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
பணக்காரர்களாக திரும்புகிறோம் என்று நண்பர்களிடம் கூறி விட்டு தப்பியோடிய மாணவர்கள் குறித்து, விடுதி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், 4 மாணவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
.
