மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளனர். ஆனால் இன்னும் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. வரும் 15-ம் தேதிக்குள் அமைச்சரவை பதவியேற்கும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இன்னும் இலாகாக்கள் தொடர்பாக பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. உள்துறை தனக்கு வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து வருகிறார். அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் இருக்கிறது.

