Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2024
in அரசியல் செய்திகள்
0
ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram




December 5, 2024, 7:17 am IST

Tamil Live Breaking News

December 5, 2024, 12:13 pm IST

Tamil Live Breaking News : ஃபெஞ்சல் நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.

December 5, 2024, 12:08 pm IST

Tamil Live Breaking News : விழுப்புரம்: ரூ.2000 பெற இன்று முதல் டோக்கன்!

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.2000 பெற இன்று முதல் டோக்கன் வழங்கப்படும் என்று அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். அரசின் நிவாரண பணிகளை ஆய்வு செய்த வருவாய் துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இந்த தகவலை பகிர்ந்தார். புயல் வெள்ள பாதிப்பு நிவாரணமாக விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட மக்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

விளம்பரம்
December 5, 2024, 9:26 am IST

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு.. உச்சம் தொட்ட முருங்கைக்காய் விலை!

தமிழகத்தில் வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. 1 கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கும், 1 கிலோ பூண்டு 450 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய், சில்லறை விற்பனையில் 1 கிலோ ரூ.500 வரையும், ஒரு முருங்கைக்காய் ரூ.40 முதல் 50 வரையும் விற்பனை ஆகிறது.

December 5, 2024, 8:58 am IST

Tamil Live Breaking News : “மக்கள் இதயங்களில் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை” – ஜெயலலிதாவுக்கு ஈபிஎஸ் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று. இதையடுத்து அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஈபிஎஸ் வெளியிட்ட பதிவில், “மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய “அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!” என்று தெரிவித்துள்ளார்.

December 5, 2024, 8:22 am IST

Tamil Live Breaking News : அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!

பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

விளம்பரம்
December 5, 2024, 7:29 am IST

Tamil Live Breaking News : கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ வசம் ஒப்படைத்தால் விசாரணை முடிய காலதாமதமாகும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. எனவே, வழக்கை தமிழக காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

December 5, 2024, 7:17 am IST

Tamil Live Breaking News : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

இன்று காலை 10 மணி வரை கிருஷ்ணகிரி, தேனி ,தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

December 5, 2024, 6:56 am IST

Tamil Live Breaking News : புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழப்பு!

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் நடந்த பிரீமியர் ஷோவை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த கூட்ட நெரிசலில் மூன்று பேர் சிக்கிய நிலையில் அதில் ஒரு பெண் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் 39 வயதுடைய ரேவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வந்த ரேவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

விளம்பரம்
December 5, 2024, 6:43 am IST

Tamil Live Breaking News : தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்பு!

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்கிறார். மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

December 5, 2024, 6:41 am IST

Tamil Live Breaking News : ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • First Published : December 5, 2024, 6:40 am IST



.

Previous Post

’மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்!’ ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்!

Next Post

தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல நடிக்கிறார் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல நடிக்கிறார் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல நடிக்கிறார் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In