இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் 337 ரன்கள் குவித்தது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
