இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் அஜித்பவாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தது. பினாமி சொத்துகளை வாங்க அஜித்பவார் பணம் கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாயம் தெரிவித்தது. சொத்துகள் சட்டப்படி பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்றும், பினாமி சொத்திற்கும், அஜித்பவார் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க வருமான வரித்துறை தவறிவிட்டதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அஜித்பவாருக்காக தீர்ப்பாயத்தில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் இது குறித்து கூறுகையில், அஜித்பவார் குடும்பம் எந்த தவறும் செய்யவில்லை. சொத்துகள் சட்டப்படிதான் வாங்கப்பட்டு இருக்கிறது”‘என்று குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து வருமான வரித்துறை பறிமுதல் சொத்துக்களை அஜித்பவாரிடமே மீண்டும் கொடுத்துவிட்டது. ஏற்கெனவே, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் அஜித்பவார் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து, அஜித்பவாரை அமலாக்கப்பிரிவு விடுவித்தது.
இந்நிலையில், “வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவின் நடவடிக்கையில் இருந்து தப்பவே பா.ஜ.க கூட்டணிக்கு அஜித்பவார் சென்றுள்ளார்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
