விழாவில் பேசிய திருமாவளவன்,
‘அம்பேத்கரை கடவுள் என்று கூறுகிறார் மோடி. மக்கள் அதை நம்பி ஏமாந்து போகிறார்கள். பாஜகவினர் பெரியாரை எதிரியாகக் காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் அம்பேத்கரை எதிரியாகக் காட்ட முடியாது.
மற்றவர்கள் விரும்புவதை நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் விரும்புவதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் எதிர்வினையாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்திருக்கிறோம்?
நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எனவே நாங்கள் பதற்றப்படத் தேவையே இல்லை. எதை எந்த நேரத்தில் அணுக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். தேர்தல், கூட்டணி என்பதெல்லாம் விசிகவுக்கு இரண்டாவதுதான். இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாழலாமா, இந்த வாய்ப்பை விட்டால் என்னாவது? என எங்ககு எந்த பேராசையும் இல்லை.
