Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News : “அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரும் இல்லை”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 7, 2024
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News : “அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரும் இல்லை”
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram




December 6, 2024, 9:10 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை

December 6, 2024, 2:12 pm IST

Tamil Live Breaking News : கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ விசாரிக்க அனுமதி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சம்பவம் நடந்த போது மாவட்ட எஸ்.பி.யாக இருந்த முரளி ரம்பாவையும் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

December 6, 2024, 1:03 pm IST

Tamil Live Breaking News : அதானியை முதலமைச்சர் சந்திக்கவில்லை – செந்தில்பாலாஜி

திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை.

அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையில்லாத குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல. திமுக ஆட்சியில் எந்த தனியார் நிறுவனத்துடனும் மின்வாரியம் நேரடி ஒப்பந்தம் செய்யவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை.

விளம்பரம்
December 6, 2024, 1:01 pm IST

Tamil Live Breaking News : இருக்கையில் இருந்த பணம் என்னுடையதல்ல – அபிஷேக் மனு சிங்வி

மாநிலங்களவையில் எனது இருக்கையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் என்னுடையதல்ல என அபிஷேக் மனு சிங்வி விளக்கம்.

நான் ஒரே ஒரு ரூபாய் நோட்டுடன்தான் நேற்று அவைக்கு வந்தேன்; இதுபோன்று நடப்பதை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்; வாசகங்கள் எழுதப்பட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் காங்கிரசின் அபிஷேக் மனு சிங்வி விளக்கம்.

December 6, 2024, 12:59 pm IST

Tamil Live Breaking News : வணிக வரித்துறை துணை ஆணையர் சடலமாக மீட்பு

தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போருர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

போருர் அம்பாள் நகரில் வசித்து வந்த செந்தில்வேல் செங்கல்பட்டில் பணியாற்றி வந்தார்; செந்தில்வேலை காணவில்லை என நேற்று உறவினர்கள் புகார் அளித்த நிலையில், இன்று அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. செந்தில்வேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறை விசாரணை  செய்து வருகிறார்கள்.

December 6, 2024, 12:58 pm IST

Tamil Live Breaking News : “ஃபெஞ்சல் புயல்: ₹2,000 கோடி உடனடியாக வழங்க வேண்டும்” – திருச்சி சிவா

புயலால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரணமாக ₹2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கடந்த முறை கேட்கப்பட்ட ₹37,000 கோடியை தற்போது வரை மத்திய அரசு வழங்கவில்லை; தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவித்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியும். நிவாரணப் பணிகளை மாநில அரசு முழு வீச்சில் செய்து வருகிறது என மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா பேச்சு.

விளம்பரம்
December 6, 2024, 11:37 am IST

Tamil Live Breaking News : “அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரும் இல்லை”

“டாக்டர் அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் வேறு யாரும் இல்லை” என அம்பேத்கர் குறித்து தந்தை பெரியார் பேசியதை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

December 6, 2024, 11:36 am IST

Tamil Live Breaking News : அம்பேத்கர் உருவப்படத்திற்கு ராகுல் காந்தி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாளையொட்டி டெல்லியில் அவரது உருவப்படத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை

December 6, 2024, 11:35 am IST

Tamil Live Breaking News : மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

மக்களவையில் சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
December 6, 2024, 11:34 am IST

Tamil Live Breaking News : அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

December 6, 2024, 11:33 am IST

Tamil Live Breaking News : “ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்க” – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 1.5 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. வெளிப்படையான ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

December 6, 2024, 11:30 am IST

Tamil Live Breaking News : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு.

விளம்பரம்
December 6, 2024, 11:29 am IST

Tamil Live Breaking News : “சரியாகயிருந்தால் அரசு தலையிடாது” – அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது.

வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துகளை அதிக அளவில் மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதுவரை ₹6,955 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளது. 1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன என சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

December 6, 2024, 9:07 am IST

Tamil Live Breaking News : புயல் பாதிப்பை பார்வையிட வரும் மத்தியக் குழு

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.

மத்திய உள்துறை, பேரிடர் குழு, வேளாண்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த 8 பேர் வருகை தரவுள்ளனர்; சென்னை வரும் குழு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளை பார்வையிடவுள்ளனர்.

December 6, 2024, 9:07 am IST

Tamil Live Breaking News : அடிலெய்டு டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த போட்டியில் விளையாடாத ரோகித்துடன் சேர்த்து அஸ்வின் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ ஜூரெல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக போலந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்
December 6, 2024, 8:32 am IST

Tamil Live Breaking News : கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே நகரில் நிலநடுக்கம்

கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆகப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

December 6, 2024, 8:31 am IST

Tamil Live Breaking News : அமைச்சர் மீது சகதி வீச்சு: இருவர் மீது விசாரணை

இருவேல்பட்டு கிராமத்தில் டிச.3-ல் வெள்ளச் சேதங்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சகதியை வீசிய ராமகிருஷ்ணன், விஜய ராணி மீது புகார் அளிக்கப்பட்டதில், அவர்களிடம் திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

December 6, 2024, 8:29 am IST

Tamil Live Breaking News : இயக்குநர் ஜெயபாரதி காலமானார்

எழுத்தாளரும் இயக்குநருமான ஜெயபாரதி (77) நுரையீரல் தொற்று காரணமாக காலமானார்.

1979ல் கிரவுட் பண்டிங் முறையில் ‘குடிசை’ என்ற படத்தை தயாரித்தவர், தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை பெற்ற புத்திரன் என்ற படத்தை 2010ல் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
December 6, 2024, 8:25 am IST

Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • First Published : December 6, 2024, 8:22 am IST



.

Previous Post

அம்பானி பழைய வீட்டில் யார் இருக்கா?.. 15,000 கோடி சொகுசு வீடு.. முகேஷ் அம்பானியின் ஆடம்பர குடியிருப்பு!

Next Post

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In