குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நோக்கி விவசாயிகள் இன்று நடைப்பயணம் மேற்கொள்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் விவசாயிகள் கடந்த இரு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லி செல்ல முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
தொடந்து இன்று ஹரியாணா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள சம்பு எல்லையில் இருந்து தில்லி நோக்கி இன்று பிற்பகல் 1 மணியளவில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தையடுத்து தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.