பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய வழக்கு ஒன்று நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களை குறிப்பிட்டு, “சாதாரண சூழலில் பாலியல் வன்முறை, கொலை, மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணை தொடங்கிய பின் ஜாமீன் வழங்கக் கூடாது.
