Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ராமதாஸ் குறித்து முதல்வர் கருத்து ஆணவ பதிலா…?" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 4, 2024
in அரசியல் செய்திகள்
0
“ராமதாஸ் குறித்து முதல்வர் கருத்து ஆணவ பதிலா…?" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி – திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், “பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” எனக் குறிப்பிட்டார்.

விகடன் கருத்துக்கணிப்பு

இதற்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஆட்சியில் இருப்பதால் ஆணவத்தில் ஆடக்கூடாது. பதில் சொல்ல வேண்டிய இடத்தில்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் இருக்கிறார். அதனால், பா.ம.க நிறுவனர் ராமதாஸை அவமானப்படுத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக்கேட்டாக வேண்டும்” எனக் காட்டமாகப் பேசினார்.

இதற்கு பதிலளித்த எம்.பி திருச்சி சிவா, “ஒருமுறை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `என் தகுதிக்கு நான் போய் இவரை சந்திப்பதா…’ என முதல்வரை சந்திப்பது குறித்துப் பேசினார். ஒரு கட்சியின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், சிறையிலே அவதிப்பட்டவர், மக்களுக்காக நின்ற ஒருவர். அவரை இப்படி பேசியது சரியா… அவர் மட்டும் இப்படி பேசலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த விவகாரம் தொடர்ந்து விவாதமான நிலையில், நமது விகடன் பக்கத்தில், “அவருக்கு (ராமதாஸ்) வேறு வேலை இல்லை – அதானியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில்…” எனக் கேள்வி எழுப்பி அதற்கு ‘ஆணவப் பதில் (அ) முறையற்ற பதில்’ – ‘சரியான பதிலே…’ – ‘கருத்து இல்லை’ என மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொடுத்து கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தோம்.

இதில் கலந்துக்கொண்ட நமது வாசகர்களில், அதானியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில், ‘ஆணவப் பதில் (அ) முறையற்ற பதில்’ என 59 சதவிகித வாசகர்களும், ‘சரியான பதிலே…’ என 35 சதவிகித வாசகர்களும், ‘கருத்து இல்லை’ என 6 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

PV Sindhu: “இம்மாத இறுதியில் பி.வி.சிந்துவிற்குத் திருமணம்” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மணமகன் யார்?



.

Previous Post

“திமுக-வுக்கான அறிகுறி இது'' – பொன்முடி மீது மக்கள் சேறு வீசியது குறித்து அண்ணாமலை

Next Post

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ – ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ – ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ - ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In