Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“திமுக-வுக்கான அறிகுறி இது'' – பொன்முடி மீது மக்கள் சேறு வீசியது குறித்து அண்ணாமலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 4, 2024
in அரசியல் செய்திகள்
0
“திமுக-வுக்கான அறிகுறி இது'' – பொன்முடி மீது மக்கள் சேறு வீசியது குறித்து அண்ணாமலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஃபெஞ்சல் புயல் கனமழையில் சென்னை தப்பித்த அதேவேளையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. முழுக்க வெள்ளக்காடாக மாறியிருக்கும் இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் குடிசைகள், உடைமைகள், கால்நடைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.

அமைச்சர் பொன்முடி

குறிப்பாக, திருவண்ணாமலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மனித உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. இத்தகைய சூழலில், விழுப்புரத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான இருவேல்பட்டு பகுதிக்குச் சென்ற மாநில வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது அப்பகுதி மக்கள் சிலர் சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில், “இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. சென்னையில் மிகக் குறைவான அளவிலேயே மழை பெய்தபோதும், முதல்வரும், துணை முதல்வரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலை ரிட்டனுக்கு பிறகு… பாஜக-வின் அடுத்த திட்டம் என்ன?!

சென்னையைத் தாண்டி என்ன நடந்தது என்பதைக் கண்காணிப்பது குறித்து கவலைப்படவேயில்லை. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR), தி.மு.க ஊடகப் பிரிவாகச் செயல்படுவதுடன், வெள்ளத்தின் உண்மையான பாதிப்புகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுர வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது.

This is the current state of affairs in Tamil Nadu. The CM and the Deputy Chief Minister were busy taking photos in the streets of Chennai while the city received very little rain and did not bother to keep track of the happenings beyond Chennai. The DIPR behaves like the media… pic.twitter.com/DvZN3UT1f0

— K.Annamalai (@annamalai_k) December 3, 2024

இது அரசின் அலட்சியத்தின் தெளிவான அறிகுறி. இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் தி.மு.க அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சத்தை எட்டியது. தி.மு.க-வுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது.” என்று விமர்சித்திருக்கிறார்.

விழுப்புரம்: `காரை விட்டு இறங்க மாட்டீங்களா?’ – பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்… நடந்தது என்ன?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal





.

Previous Post

திருச்சி சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் -ரூ.1கோடி இழப்பீடு கேட்ட பாஜக இராம ஸ்ரீநிவாசன்… காரணம் என்ன? | BJP Rama srinivasan legal notice to trichy surya

Next Post

“ராமதாஸ் குறித்து முதல்வர் கருத்து ஆணவ பதிலா…?" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ராமதாஸ் குறித்து முதல்வர் கருத்து ஆணவ பதிலா…?" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

``ராமதாஸ் குறித்து முதல்வர் கருத்து ஆணவ பதிலா...?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In