Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Fengal: 'குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 நிவாரணம்' – 6 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 3, 2024
in அரசியல் செய்திகள்
0
Fengal: 'குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 நிவாரணம்' – 6 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழையில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மக்கள் உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் எனப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஊத்தங்கரை

இதன் காரணமாக, ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (டிசம்பர் 3) நடைபெற்றது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில்,

* புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை.

* சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000 இழப்பீட்டுத் தொகை.

* முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளுக்குக் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை.

திருவண்ணாமலை நிலச்சரிவு

* மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17,000 இழப்பீட்டுத் தொகை.

* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22,500.

* மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500.

திருவண்ணாமலை நிலச்சரிவு: `இன்னும் ரெண்டு பேரை மீட்கல’ – போராட்டத்தில் கதறி அழுத உறவினர்கள்!

* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 நிவாரணத் தொகை.

* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு ரூ.4,000-மும், கோழி உயிரிழப்புகளுக்கு ரூ.100-ம் நிவாரணத் தொகை.

* அதி கனமழையின் காரணமாகக் கடுமையான மழைப்பொழிவினைச் சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாள்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ. 2,000 நிவாரணத் தொகை.

ஸ்டாலின்

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, புதிய சான்றிதழ்கள் வழங்கச் சிறப்பு முகாம்கள்.

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஊத்தங்கரை-யை உலுக்கிப்போட்ட ஃபெஞ்சல் புயல்; வரலாறு காணாத பாதிப்பு! – Spot Visit Album

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram



.

Previous Post

சம்பல் மாவட்டத்துக்குச் செல்கிறார் ராகுல்!

Next Post

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65!

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In