மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அப்படி இருக்கும்போது இப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படி இந்த அளவுக்கு அமோக வெற்றி பெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தேர்தல் வெற்றிக்கு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டம் தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. அப்படி இருந்தும் அதற்கும் மேலாக பா.ஜ.க கடந்த 5 மாதத்தில் ஆற்றிய பணிகள் தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசிய போது, “மக்களவை தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க உடனே வேலையை தொடங்கியது. பா.ஜ.க தனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தலில் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது.
