சென்னை: வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழக அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலில் 24 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த பொது விடுமுறை பொருந்தும்.
இந்த பட்டியலில், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு முதல் பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், உள்ளிட்டவை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
