ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. 81 தொகுதிகள் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதற்கட்டத் தேர்தல், 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதியும், மீதமிருந்த 38 தொகுதிகளுக்கு 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.

ஹேமந்த் சோரன் முதல்வர் பதவிக்கு வந்ததும், கட்சியின் முக்கிய நிர்வாகியான சம்பாய் சோரன் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானார். இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.
