Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய வீரர் புஜாரா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

புஜாரா கூறுவதென்ன?

பார்டர் – கவாஸ்கர் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. 3-வது இடத்தில் மிகுந்த அனுபவமுள்ள கே.எல்.ராகுல் அந்த இடத்தில் களமிறங்க வேண்டும் எனக் கூறுவேன். இடதுகை வலதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்திய அணி தேவ்தத் படிக்கல்லை 3-வது வீரராக களமிறக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

அவர் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்குபவர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதைக் காட்டிலும், 3-வது வீரராக களமிறங்குவது அவருக்கு எளிதாக இருக்கும். அவரால் 3-வது இடத்தில் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், அது அணிக்கு நன்றாக அமையும் என்றார்.

இந்தியாவின் டேவிட் வார்னர்

இந்தியா உருவாக்கிய மிகவும் திறமையான வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒருவர் என புஜாரா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஜெய்ஸ்வால் நிறைய விஷயங்களை நிரூபிக்க உள்ளார் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணி இந்த தொடரை வெல்ல வேண்டுமென்றால், ஜெய்ஸ்வால் அவரது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் எப்படி விளையாடினாரோ, அதேபோல இந்திய அணிக்காக ஜெய்ஸ்வாலால் விளையாட முடியும்.

இதையும் படிக்க: உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த முகமது ஷமி!

தொடக்க ஆட்டக்காரராக அவர் அணிக்கு மிக முக்கிய வீரராக உள்ளார். அவர் மனதளவில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றார்.



.

Previous Post

America: ட்ரம்பிடம் பேசிய சுந்தர் பிச்சை; இணைப்பில் இருந்த எலான் மஸ்க் – தொடரும் நட்பு!

Next Post

America-வில் வழக்கு; ADANI-க்கு ARREST WARRANT- சிக்கும் மாநில அரசுகள்? MODI |RAHUL – Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
America-வில் வழக்கு; ADANI-க்கு ARREST WARRANT- சிக்கும் மாநில அரசுகள்? MODI |RAHUL – Imperfect Show

America-வில் வழக்கு; ADANI-க்கு ARREST WARRANT- சிக்கும் மாநில அரசுகள்? MODI |RAHUL - Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In