Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்கில், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திர மாநிலங்களில் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும், குறிப்பிட்ட ஆண்டில், காங்கிரஸ் தான் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷூக்கு அமித் மால்வியா பதிலளித்துள்ளார். எனவே, குற்றம்சாட்டுவதற்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் ஆட்சியில் இருந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது என்று மால்வியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், ரமேஷ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் மால்வியா, எப்போதும், ஒரு விவகாரத்தில் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு, விவகாரத்தை முழுமையாக படித்துவிட வேண்டும், அதுபோலவே, அமெரிக்க நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக மூத்த காங்கிரஸ் தலைவர் படித்திருக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்படும்வரை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள்தான் என்றும் பதிலளித்துள்ளார்.

கடந்த 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியிருப்பதாகவும், அதானியின் செயல் சட்டப்படி தவறானது என நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கௌதம் அதானி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.



.

Previous Post

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டன! pdf டவுன்லோடு செய்வது எப்படி?

Next Post

இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடிப் பாலத்தைப் பெறப்போகும் நகரம் – இங்கு நிறைய விஷயங்கள் ஸ்பெஷலாம்! | Visakhapatnam to get India’s longest glass skywalk bridge – Where are the other glass bridges in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடிப் பாலத்தைப் பெறப்போகும் நகரம் – இங்கு நிறைய விஷயங்கள் ஸ்பெஷலாம்! | Visakhapatnam to get India’s longest glass skywalk bridge – Where are the other glass bridges in India

இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடிப் பாலத்தைப் பெறப்போகும் நகரம் - இங்கு நிறைய விஷயங்கள் ஸ்பெஷலாம்! | Visakhapatnam to get India's longest glass skywalk bridge - Where are the other glass bridges in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In