Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா: `இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..' – தேர்தல் தொடங்கிய நிலையில் பா.ஜ.கவில் சேர்ந்த வேட்பாளர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா: `இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..' – தேர்தல் தொடங்கிய நிலையில் பா.ஜ.கவில் சேர்ந்த வேட்பாளர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கட்சி நிர்வாகிகளுடன் மும்பை நாலாசோபாரா ஹோட்டலில் தங்கி இருந்த போது போலீஸார் ரெய்டு நடத்தி 9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் விரார், நாலாசோபாரா பகுதியில் பகுஜன் விகாஷ் அகாடி என்ற கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஹிதேந்திர தாக்குர் கொடுத்த புகாரின் பேரில்தான் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பகுஜன் விகாஷ் அகாடி சார்பாக தகானு தொகுதியில் சுரேஷ் பத்வி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். கடந்த 15 நாள்களாக அவர் தீவிர பிரசாரமும் செய்தார். பா.ஜ.கவின் வினோத் தாவ்டே ரூ.5 கோடியுடன் வந்து வாக்காளர்களை சந்திப்பதாக ஹிதேந்திர தாக்குர் புகார் செய்திருந்தார்.

இன்று திடீர் திருப்பமாக சுரேஷ் பத்வி பா.ஜ.கவில் சேர்ந்தார். அதோடு தகானு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வினோத் மேத்தாவிற்கு ஆதரவு கொடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சுரேஷ் கூறுகையில், “வாக்குகள் சிதறுவதை தவிர்க்கவே இம்முடிவை எடுத்தேன். பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் வளர்ச்சித்திட்டங்கள் விரைவு பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்தேன்”என்றார்.

இத்தொகுதியில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வினோத் நிகோலே எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தற்போது அவர் மீண்டும் மகாவிகாஷ் அகாடி சார்பாக போட்டியிடுகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ஆரம்பித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஏற்கெனவே பா.ஜ.க கடந்த 2022ம் ஆண்டு சிவசேனாவை இரண்டாக உடைத்துதான் ஆட்சியை பிடித்தது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: விறுவிறுப்பு… ஆர்வத்துடன் வாக்களித்த பாலிவுட், அரசியல் பிரபலங்கள்..!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook



.

Previous Post

இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

Next Post

பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்

பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In