Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

G20: உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் திட்டங்களை விளக்கிய பிரதமர்; என்னென்ன தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2024
in அரசியல் செய்திகள்
0
G20: உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் திட்டங்களை விளக்கிய பிரதமர்; என்னென்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2333இந்தியப் பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்​றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளி​யினர் பிரதமர் மோடியை சம்ஸ்கிருதத்தில் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி, நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்​சிகள் நடத்தி உற்சாகமாக வரவேற்​றனர். அதைத் தொடர்ந்து பிரேசிலில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

G20 பிரேசில்

இந்த மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்த உச்சிமாநாட்டில், “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருத்தை முன்வைத்தோம். இந்த அழைப்பு தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.

உலகளாவிய மோதல்களால், தெற்கின் நாடுகளில் உணவு, எரிபொருள், உர தட்டுப்பாடு நெருக்கடி ஏற்பட்டு மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். எனவே நாடுகளுக்குள் நடக்கும் சவால்களையும், போர், பதற்றங்கள் ஆகியவற்றை நாம் மனதில் கொள்ளும்போதுதான், இந்த மாநாட்டின் விவாதங்கள் வெற்றிகரமாக முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது, ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு ஜி20-ன் நிரந்தர உறுப்பினர்களை வழங்குவதன் மூலம் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்தினோம்.

G20 பிரேசில்

அதுபோலவே, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களையும் நாம் சீர்திருத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. நாட்டில் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகித்து வருகிறது. 550 மில்லியன் மக்கள் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பயனடைகிறார்கள். 300 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு கடன் அணுகல் வழங்கப்பட்டுள்ளனர். நாங்கள் இயற்கை விவசாயம், கரிம வேளாண்மை மட்டுமல்லாமல் புதிய தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்திவருகிறோம்.

சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி சேர்க்கைக்கு பெரிதும் உதவி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய மாதிரியை உருவாக்கி வருகிறோம். தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பிரேசில், வறுமைக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த கருத்தை இந்தியா ஆதரிக்கிறது.” எனப் பேசினார்.

Manipur: `பிடிவாதத்தை கைவிட்டு மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்” – ப. சிதம்பரம் சொல்வதென்ன?



.

Previous Post

“இந்தியில் LIC இணையதளம்; எப்படித் திணிக்கலாம் என்பதிலேயே மத்திய அரசு..!" – இபிஎஸ், வைகோ கண்டனம்

Next Post

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா… வரவேற்பு முதல் பரிசுகள் வரை -Photo Album | Farmers’ felicitation ceremony for Edappadi Palaniswami

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா… வரவேற்பு முதல் பரிசுகள் வரை -Photo Album | Farmers’ felicitation ceremony for Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா... வரவேற்பு முதல் பரிசுகள் வரை -Photo Album | Farmers' felicitation ceremony for Edappadi Palaniswami

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In