இந்தியாவின் பொது விநியோக அமைப்பு (Public Distribution System) மூலம் ஆண்டுக்கு 814 மில்லியன் மக்களுக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக 20 மில்லியன் டன் அரிசி, கோதுமை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்துக்காக கொண்டு செல்லப்படும் 28 சதவிகித தானியங்கள் மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு செய்த சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Research on International Economic Relations – ICRIER) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
