‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாா் 88-ஆவது நினைவு நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தினா்.
ஆளுநா் ஆா்.என். ரவி: வ.உ. சிதம்பரனாா் நினைவு நாளில் அவருக்கு நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. சிறந்த அறிஞா், தொலைநோக்கு சமூக சீா்திருத்தவாதி மற்றும் தீவிர தேசியவாதியான அவா் லோகமான்ய திலக்கின் கொள்கைகளுக்கு துணிச்சல்மிகு செயல்வடிவம் கொடுத்தாா். இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஈடு இணையற்ற உறுதியுடன் வழிநடத்தினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழ்ப் பற்று – ஈகையுணா்வு – விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழா் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாா் நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையை துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இதேபோல் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவா்களும் வ.உ.சிதம்பரனாருக்கு புகழஞ்சலி செலுத்தினா்.
