தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் 22 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
மழையால் வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது வரத்து அதிகரித்து வருவதால், விலை சரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த இரு மாதங்களாக தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற – இறக்கத்தில் இருந்த நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால் இந்த மாதம் 22 சதவீதம் தக்காளி விலை சரிந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
