Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சினிமா பாணியில் நிலமோசடி: 2 பெண்கள் கைது…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சினிமா பாணியில் நிலமோசடி: 2 பெண்கள் கைது…
40
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். இவர் தனது அண்ணன் வேணுகோபால் உடன் சேர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு குறிச்சி பகுதியில் நிலம் வாங்கினார். பின்னர் அதில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தை இரண்டு பேரும் சேர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில்,கடந்த ஆண்டு வேணுகோபால் நிறுவனத்தில் இருந்த போது கோவையைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர் அங்கு வந்தார். அவர் வேணுகோபாலிடம் தான் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதாகவும், இந்த இடத்தை தான் வாங்கி இருப்பதால் உடனடியாக நீங்கள் காலி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் உடனே தனது தம்பி விஜயகுமாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு வந்து அவரின் பெயரில் அந்த இடம் இருப்பதற்கான ஆவணங்களை காட்டிய, பின்னர் முபாரக் அலி அங்கு இருந்து சென்று விட்டார்.

பின்னர் சில நாள்கள் கழித்து விஜயகுமாருக்கு செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அந்த இடத்துக்கு தற்போதைய மார்க்கெட் விலை எவ்வளவோ அதை நீங்கள் என்னிடம் கொடுத்தால் அந்த இடத்தை உங்களுக்கே கிரயம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது 2022 ஆம் ஆண்டு பாக்கியம் என்பவரிடம் முபாரக் அலி அந்த இடத்தை வாங்கி இருப்பதாக இருந்தது. தன்னுடைய நிலம் வேறு ஒரு நபரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முபாரக் அலி, பாக்கியம், சாந்தி, கௌதமன், நிஷார் அகமது ஆகியோர் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு போலி ஆவணங்களை தயாரித்து விஜயகுமாரின் நிலத்தை முபாரக் அலிக்கு விற்பனை செய்ததாக பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். இதையடுத்து மோசடி செய்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்குரைஞர் ஒருவரை தேடி வரும் போலீசார், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Previous Post

”எங்களை புறக்கணிக்கிறார்கள்”- குமுறிய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்..!

Next Post

மஹாராஷ்டிரா அரசியலில் நேரடியாக நுழைந்த அதானி.. அதானியின் வீட்டில் நடந்த சீக்ரெட் பாஜக மீட்டிங்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மஹாராஷ்டிரா அரசியலில் நேரடியாக நுழைந்த அதானி.. அதானியின் வீட்டில் நடந்த சீக்ரெட் பாஜக மீட்டிங்..

மஹாராஷ்டிரா அரசியலில் நேரடியாக நுழைந்த அதானி.. அதானியின் வீட்டில் நடந்த சீக்ரெட் பாஜக மீட்டிங்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    நிலபகரிப்பு நில மோசடி செய்த ஐந்து பேரையும் கைது செய்த கோவை மாவட்ட காவல்துறை வரை பாராட்டுகிறேன். அதேநேரம் இந்த அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மற்றும் வட்டாட்சியர் இவர்களையும் வழக்கில் கைது செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு அரசு அலுவலர்களும் உதவி இல்லாமல் எந்த ஒரு நில அபகரிப்போ நில மோதடியோ செய்ய இயலாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In