Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”எங்களை புறக்கணிக்கிறார்கள்”- குமுறிய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2024
in அரசியல் செய்திகள்
1
”எங்களை புறக்கணிக்கிறார்கள்”- குமுறிய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்..!
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகப்பட்டினத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திமுக கூட்டணி கட்சியான விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பெயரை போடாமல் புறக்கணிப்பதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டது. இதே போல் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சியை சேர்ந்த அந்த தொகுதியின் சி.பி.எம் எம்.எல்.ஏ நாகை மாலி பெயரை போடுவதில்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக நாகையின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இது போல் புறக்கணிக்கப்படுவதாக விசிகவினர் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 71வது கூட்டுறவு வார விழா அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நாகை மாலி, “அரசு நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் ப்ளக்ஸ் போர்டுகளில் என் பெயரையும், ஷாநவாஸ் பெயரையும் போடாத காரணம் என்ன? நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் இது போல் நடப்பது தவறு” என்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் மேடையில் இருக்கும் போதே இதை கூறியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், “அரசு நிகழ்ச்சிகளில் கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி கூட்டணி கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எங்களது பெயர்கள் விடுபட்டுவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் அதிகாரிகள் செய்யக்கூடிய சிறி தவறு எங்கே போய் முடிகிறது என்பதை பார்க்க வேண்டும். கடந்த வாரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது பெயர் இல்லை. அதை எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் சித்தரித்தனர். ஏற்கனவே இந்த கூட்டணியை எப்படியாவது உடைச்சிட முடியாதா, சிக்கலை ஏற்படுத்தி விட முடியாதானு வெளியே இருக்க கூடிய சக்திகள் கண்ணும், கருத்துமாக வேலை செய்கிறார்கள்.

 நாகை நிகழ்ச்சியில் அன்பில் மகேஸ், ஆளூர் ஷாநவாஸ்

நாகை நிகழ்ச்சியில் அன்பில் மகேஸ், ஆளூர் ஷாநவாஸ்

யாரோ ஒரு அதிகாரி செய்யும் பிழை திட்டமிட்டு அரசே இப்படி செய்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தான் திராவிட மாடலா, சமூக நீதியா என்கிற கேள்விகள் வருகிறது. அதிகாரி செய்யும் தவறால் தேவையில்லாமல் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. இது இனி நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள். எம்.எல்.ஏ பெயர் என்பது மக்கள் பிரதி நிதியின் பெயர். எங்களுடைய பெயர் வர வேண்டும் என்பதால் இதை சொல்லவில்லை. இங்கு தெருவில் ஒரு போர்டு வைப்பதால் எங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைக்க போவதில்லை. அப்படி ஒரு வெளிச்சம் தேவையுமில்லை.

பெயர் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இதை சொல்லவில்லை. இதற்கு பின்னால் இருக்க கூடிய சுய மரியாதையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இது இந்த அரசுக்கே கெட்டபெயர் ஏற்படுகிறது. இது தேவையில்லால் வேறு வகையில் எதிரொலிக்கிறது. இந்த விவகாரத்தை அரசுடன் முடிச்சு போடும் நிலைக்கு தள்ளுகிறீர்கள். இனி யார் பெயரும் விடுபடாமல் புரோட்டாக்கால் படி பெயர் போட வேண்டும்” என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கூறிய நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்காது. நான் இருக்கும் வரை உங்களுக்கு உரிய மரியாதையை நான் கொடுப்பேன்” என்றார்.

.

Previous Post

அரசுப் பேருந்தில் சென்ற இளைஞா் வெட்டிக்கொலை..!

Next Post

சினிமா பாணியில் நிலமோசடி: 2 பெண்கள் கைது…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சினிமா பாணியில் நிலமோசடி: 2 பெண்கள் கைது…

சினிமா பாணியில் நிலமோசடி: 2 பெண்கள் கைது...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    புறக்கணிக்கும் அளவிற்கு தங்கள் கட்சியின் அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நடந்து கொள்கிறார்கள் அதை மாற்றிக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் மாற மாட்டீர்கள் என்பது வேறு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In