தி நியூ இந்தியன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் இன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
விழாவின் தொடக்கமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் – மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து விழாவின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சின்மயா மிஷன் சா்வதேசத் தலைவா் பூஜ்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி சிறப்புரையாற்றினார்.
விருது பெறுவோர் தெரிவு செய்யப்பட்ட முறை பற்றி விளக்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா, விருது பெறுவோர் பெயர்களை அறிவித்தார்.
அ-புனைவுக்கான பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட்’ நூலுக்காக எழுத்தாளர் நீரஜா செளதுரிக்கு விருது வழங்கப்பட்டது.
புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’ நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.
இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்-க்கு வழங்கப்பட்டது.
