சமீபத்தில் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் இன்னும் சில பேருக்குக் கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு வருகிற ஜனவரி முதல், குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுபோல முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து தபால் கிடைக்கப் பெற்றவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆகவே விரைவில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வேறு என்ன குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து தருவதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றார்.
இது குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. மறுபக்கம் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கின.
