Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

The Guardian: 'இனி எக்ஸ் தளத்தில் செய்திகளைப் பகிர மாட்டோம்'; கார்டியனின் அறிவிப்புக்குக் காரணமென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2024
in அரசியல் செய்திகள்
0
The Guardian: 'இனி எக்ஸ் தளத்தில் செய்திகளைப் பகிர மாட்டோம்'; கார்டியனின் அறிவிப்புக்குக் காரணமென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


1821ஆம் ஆண்டு லண்டனில் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், பின்னர் 1959ஆம் ஆண்டு ‘தி கார்டியன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வெளிவந்துகொண்டிருக்கிறது.

203 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தநாளிதழ், ‘ஏன் இனி எக்ஸ் தளத்தில் ‘தி கார்டியன்’ பதிவிடாது’ எனத் தலைப்பிட்டுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிடுவதை நிறுத்துகிறோம். ஆனால், எக்ஸ் பயனர்கள் எங்கள் கட்டுரைகளைப் பகிரலாம் எனத் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்புக்காக பிரசாரம் செய்த மஸ்க்

இதற்குக் காரணமாக ‘தி கார்டியன்’ நாளிதழ் தெரிவித்திருப்பதாவது, “தீவிர வலதுசாரி சதி கோட்பாடுகள், இனவெறி உட்படப் பல மோசமான கருத்துகள் எக்ஸ் தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக நாங்கள் நினைத்ததை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் அடிக்கோடிட்டுக் காட்ட உதவியுள்ளது. எக்ஸ் என்பது ஒரு நச்சு ஊடகம். அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது அரசியல் உரையாடலைக் கட்டமைக்க முடிந்தது” எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அமெரிக்கத் தேர்தலின்போது எக்ஸ் தளத்தின் சிஇஒ எலான் மஸ்க் தொடர்ந்து நச்சு கருத்துகளைப் பரப்பி வந்ததால், இனி எக்ஸ் தளத்தில் எந்த செய்தியையும் பதிவிடப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறது.

எக்ஸ் பயனர்கள் இனி எங்கள் கட்டுரைகளை பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் ,செய்தி சேகரிப்பதற்காக எக்ஸ் தளத்தை எங்கள் செய்தியாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், “சமூக ஊடகங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய கருவியாக, புதிய வாசகர்களை ஈர்ப்பதற்கு உதவலாம். ஆனால், எக்ஸ் தளம் எங்கள் பணியை ஊக்குவிப்பதில் குறைவான பங்கே வகிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. மேலும் theguardian.com என்ற இணையதளத்தில் தங்களின் இதழ்களை வாசகர்கள் படிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தி கார்டியன்

ஃபேஸ்புக்கிற்கு பிறகு மிகவும் பிரபலமான சமூக ஊடகமாக இருந்த டுவிட்டரை, உலக பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் என்பதை எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்ததில் இருந்து பல மாற்றங்களை எலான் மஸ்க் செய்தார்.

இவரின் செயல்பாடுகளால் குழப்பங்களும், எதிர்மறையான கருத்துகளும் பயனர்களிடம் இருந்து வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் தளத்தில் ‘தி கார்டியன்’ கணக்கை 10.8 மில்லியன் நபர்கள் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY



.

Previous Post

கேரளாவில் வெறும் ரூ.30 கட்டணத்தில் புதிதாக 10 நமோ பாரத் ரயில்கள் – விரைவில் தமிழ்நாட்டுக்கு வருமா? | Kerala is ready to welcome 10 namo bharat trains with starting fare Rs.30

Next Post

4000 பேருடன் இருக்கும் சுரங்கத்தின் வழியை அடைத்த தென்னாப்பிரிக்க காவல்துறை! காரணம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
4000 பேருடன் இருக்கும் சுரங்கத்தின் வழியை அடைத்த தென்னாப்பிரிக்க காவல்துறை! காரணம் என்ன?

4000 பேருடன் இருக்கும் சுரங்கத்தின் வழியை அடைத்த தென்னாப்பிரிக்க காவல்துறை! காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In