“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியது தொபர்பாக, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்குமாறு ஊள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை அறிவுறுத்தியுள்ளார்; இதனால், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக நான் எழுதிய கடிதத்தை நிறுத்தி வைக்கிறேன்!”
அமைச்சர் செந்தில் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவே 7 மணிக்கு உத்தரவிட்டார். 5 மணி நேரத்திற்கு உள்ளாகவே அதை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவரே அறிவித்தார்.
உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி தனது கருத்தை அறிய அட்டர்னி ஜெனரலை அணுக உள்ளதாக ஆளுநர் R.N. ரவி தெரிவிக்கிறார்.


