Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்; திமுக ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு..?'' – அண்ணாமலை காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2024
in அரசியல் செய்திகள்
0
“மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்; திமுக ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு..?'' – அண்ணாமலை காட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை விக்னேஷ்வரன் என்பவர், பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரனை போலீஸார் கைதுசெய்து தற்போது விசாரணை நடத்திவருகின்றனர். அதேசமயம், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்றும் தி.மு.க அரசு மீது விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன.

கிண்டி அரசு மருத்துவமனை
கிண்டி: “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அந்த வரிசையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர், விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஏற்கெனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின்போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாகப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது.

அண்ணாமலை

கடந்த 2023-ம் ஜனவரி, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்குள்ளானார். கடந்த வாரம், திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் மீது தி.மு.க உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் திரு பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைந்து நலம்பெற, இறைவனை… pic.twitter.com/Zh6SXhVKXT

— K.Annamalai (@annamalai_k) November 13, 2024

கிண்டி: அரசு மருத்துவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம்; `நடந்தது இதுதான்..!’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88





.

Previous Post

மாதவரம் ரவுண்டானா அருகே லாரியில் சிக்கி கணவன், மனைவி பலி

Next Post

இணைந்து நடிக்கும் மம்மூட்டி, மோகன்லால்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இணைந்து நடிக்கும் மம்மூட்டி, மோகன்லால்?

இணைந்து நடிக்கும் மம்மூட்டி, மோகன்லால்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In