காற்று மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் டெல்லி எப்போதும் முன்னணியில் இருக்கும். அதனால், கடந்த மாதம் 14-ம் தேதி டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டிருந்தது. அதைமீறி வெடி வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. இதை எதித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன் பிறகு நீதிபதிகள், “அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும்.
