டேராடூனில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கார் மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கார் நொறுங்கியது.
இன்று(நவ. 12) அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில், காரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்தில் பலியான நிலையில், ஒருவர் பலத்த காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
