பத்திரிகையாளர் சந்திப்பு
பார்டர் – கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது தொடர்பான சரியான தகவலை உங்களுக்கு விரைவில் தெரியப்படுத்துவோம். அவர் முதல் போட்டியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற தகவலை தொடர் தொடங்குவதற்கு முன்பாக தெரிவித்துவிடுவோம்.
