Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேலையை விட்டு துரத்திய ஹெச்ஆர்.. தேடி கொலை செய்த முன்னாள் ஊழியர்.. ஷாக் சம்பவம்.. அதிர்ச்சி தண்டனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 29, 2023
in அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வேலையை விட்டு துரத்திய ஹெச்ஆர்.. தேடி கொலை செய்த முன்னாள் ஊழியர்.. ஷாக் சம்பவம்.. அதிர்ச்சி தண்டனை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

International oi-Halley Karthik
Updated: Thursday, June 29, 2023, 15:20 [IST]
பாரீஸ்: தன்னை வேலையிலிருந்து நீக்கியதற்காக மனித வள மேலாளர்களை (HR) முன்னாள் ஊழியர் ஒருவர் தேடி சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலானதாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வேலையிலிருந்து துரத்தப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதே போன்ற ஓர் சூழலை எதிர்கொண்டவர்தான் கேப்ரியல் ஃபோர்டின் எனும் 48 வயதான நபர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி பிரான்சின் அல்சேஸ் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் மனித வள மேலாளர் எஸ்டெல் லூஸ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல அன்று மாலை அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில், மற்றொரு மனிதவள மேலாளரும் சடலமாக மீட்கப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் பிரான்ஸ் முழுவதும் பேசு பொருளானது. அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் கடைசி சடலம் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள வேலன்ஸ் நகரில் மூன்றாவது நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையினர் இந்த சடலத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்த போதே சில கி.மீ தொலைவில் மற்றொரு சடலம் கிடப்பதாக தகவல்கள் வந்தன. இப்படியாக அடுத்தடுத்த சடலங்கள் போலீசாரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள்தான். ஆனால் இவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த எதிரிகளும் கிடையாது. இப்படி இருக்கையில் ஏன் இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. எனவே இவர்கள் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்களின் பட்டியலை காவல்துறை தயாரித்தது. இதில் இவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே ஓர் ஒற்றுமை இருந்தது. அதாவது ஒரேயொரு ஊழியர் மட்டும் கொலை செய்யப்பட்ட நபர்கள் அதிகாரிகளாக இருந்த அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்திருக்கிறார். அந்த ஊழியர்தான் கேப்ரியல் ஃபோர்டின். எனவே போலீஸ் அவரை தேட தொடங்கியது. எதிர்பார்த்ததை போலவே அவர் தலைமறைவாக இருந்திருக்கிறார். இருப்பினும் நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவரிடம் மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, அவர் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிறுவனங்களிலிருந்து அவர் வெளியேற்றவும்பட்டிருக்கிறார். இப்படியாக அவர் எந்தெந்த நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அந்த நிறுவனங்களின் மனித வள மேலாளர்கள்தான் தற்போது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவருடன் பணி செய்த சக ஊழியர்களிடம் விசாரித்ததில், கேப்ரியல் ஃபோர்டின் எப்போதும் ஒருவித இறுக்கத்துடன்தான் வேலை பார்த்து வந்ததாகவும், இந்த இறுக்கம்தான் அவரை கொலை வரை கொண்டு சென்றிருக்கும் என்று கூறுகின்றனர். மனித வள மேலாளர் இவரிடம் கண்டிப்புடன் நடந்துக்கொண்டதுதான் இந்த இருக்கத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர். வேலையிலிருந்து தன்னை நீக்கிய HR-களை தேடி தேடி சென்று கொலை செய்துள்ள சம்பவம் பிரான்சிஸ் பேசுபொருளாகியுள்ளது. தற்போது இந்த வழக்கில் வாலன்ஸ் நகரின் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இவர் 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறையை அனுபவிப்பார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
An ex-employee went after the Human Resource (HR) managers for firing him and killed him. A French court has given him a life sentence in a related case.

.

Previous Post

`செந்தில் பாலாஜி கைதுக்காகப் பழிவாங்குகிறார்கள்..!' – சிடுசிடுக்கும் எஸ்.ஜி.சூர்யா

Next Post

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: ‘தைனிக் பாஸ்கர்’ ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: ‘தைனிக் பாஸ்கர்’ ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: ‘தைனிக் பாஸ்கர்’ ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In