பிகாரில் உடல் நசுங்கி உயிரிழந்த ரயில்வே ஊழியரின் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகாரில் லக்னௌ – பரவுனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை (நவ. 9) பரவுனி ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. இந்த நிலையில், ரயில் பெட்டிகளை இன்ஜினுடன் இணைக்கும் பணியில், அருண் குமார் ராவத் என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஊழியர் ரயில் பெட்டிகளுக்கு இடையில் இருப்பதைக் கவனிக்காத லோகோ பைலட், ரயிலை இயக்கியுள்ளார். ரயிலை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், பெட்டிகளுக்கு இடையில் இருந்த அருண் குமார் உடல் நசுங்கி பலியானார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, லோகோ பைலட் அங்கிருந்து தப்பியோடினார்.

❤️👌❤️❤️❤️❤️💚💚💚💚🫀😈😈😈😈😈😈