ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க மக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரிப்பன் மாளிகையை மக்கள் சுற்றிப்பார்க்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
‘சிங்கார சென்னை 2.0-ன் கீழ் சென்னை மக்கள், ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்பினால் commcellgcc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 9445190856 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.