ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடக்கிவைத்தார்.
ஆந்திரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் கடல் விமானத்தை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று என்டிஆர் மாவட்டத்தில் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமானம் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியிடங்கள் அதிகரிப்பு!
இந்த சோதனை ஓட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கிவைத்தார். விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இந்த நிகழவில் கலந்துகொண்டார்.
சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.