Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

7 அதிகாரிகள், 2 மணி நேரம், 50 கேள்விகள்… மைசூரு நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் விசாரணை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2024
in அரசியல் செய்திகள்
0
7 அதிகாரிகள், 2 மணி நேரம், 50 கேள்விகள்… மைசூரு நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் விசாரணை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


.கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வரும் சித்தராமையா, மைசூரு அருகில் உள்ள சித்தராமயனஹுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை ‘மூடா’ எனப்படும் மைசூரு நகர‌ மேம்பாட்டு ஆணையம் கைப்பற்றியது. அதற்கு ஈடாக மற்றொரு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பை விட பலமடங்கு கூடுதல் மதிப்புள்ள நிலத்தை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சித்தராமையா

இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அம்மாநில கவர்னர் ஒப்புதலுடன் முதல்வர் சித்தராமையா மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவரின் மனைவி, சகோதரர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சித்தராமையா மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்தராமையாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. 7 அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவினர், சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறார்.

சித்தராமையா

விசாரணைக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் சித்தராமையா, “அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உண்மையான பதிலை அளித்திருக்கிறேன். என்மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்” என தெரிவித்துச் சென்றார்.

முதல்வர் சித்தராமையாவை பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க- வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

UP: “பெண்களுக்கு ஆண்கள் அளவெடுக்கக் கூடாது; ஜிம்மிலும் No Male Trainers” -மகளிர் ஆணையம் பரிந்துரை!



.

Previous Post

நெட் தேர்வில் ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு.. UGC NET டிசம்பர் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!

Next Post

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In