Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`முதல்வர் அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்து; ஆளுநருக்கொன்று உங்களுக்கொன்றா?' – அன்புமணி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2024
in அரசியல் செய்திகள்
0
`முதல்வர் அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்து; ஆளுநருக்கொன்று உங்களுக்கொன்றா?' – அன்புமணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோயம்புத்தூரில் முதல் ஸ்டாலின் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படவில்லையென்றும், அதற்காகத் தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அன்புமணி ராமதாஸ், “கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை. அன்னைத் தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் கடந்த 17.12.2021 அன்று வெளியிடப்பட்ட 1037 என்ற எண் கொண்ட அரசாணையின் 7(இ) பிரிவின்படி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

ஆனால், தமிழக அரசு பிறப்பித்த ஆணையை முதலமைச்சரே மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருப்பூரில் கடந்த 10.02.2019 அன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டிக் கண்டித்தார். அதன்பின் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னையில் ஆளுநர் பங்கேற்ற சென்னைத் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி விடுபட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்” என்று ஆளுநரை விமர்சித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த விமர்சனம் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதைக் கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பொருந்துமா? என்பதை அவர் தான் கூற வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதைத் தமிழ்நாட்டில் உள்ள தமிழுணர்வு மிக்க குடிமக்களால் சகித்துக் கொள்ள முடியாது. கோவையில் செவ்வாய்க்கிழமை தாம் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யாததற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தவறாமல் இசைக்கப்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த தமிழ் ஷேக்ஸ்பியர்!



.

Previous Post

இந்தியாவுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுகிறதா?

Next Post

US Election 2024: Donald Trump Vs Kamala Harris – யார் எங்கே வெற்றி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US Election 2024: Donald Trump Vs Kamala Harris – யார் எங்கே வெற்றி?

US Election 2024: Donald Trump Vs Kamala Harris - யார் எங்கே வெற்றி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In