Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொடநாடு: இபிஎஸ்-ஸைத் தொடர்படுத்தி பேசத் தடை; ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2024
in அரசியல் செய்திகள்
0
கொடநாடு: இபிஎஸ்-ஸைத் தொடர்படுத்தி பேசத் தடை; ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, 2017-ல் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவமும், அப்போது பணியிலிருந்த காவலாளி, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், பங்களா சிசிடிவி ஆபரேட்டர் ஆகியோர் கொலை, சாலை விபத்து, தற்கொலை என அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு, ஏழு வருடங்களாக விசாரணையிலேயே இருக்கிறது. சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர்.

தனபால் – எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்த பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கொடநாடு விவகாரத்தில் தொடர்புப்படுத்திப் பேசிவந்தார்.

இதனால், தனபால் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்த எடப்பாடி பழனிசாமி, அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசுவதாகவும், இனிமேல் இதில் தன்னை தொடர்புப்படுத்திப் பேசுவதற்கு தடைவிதித்து மானநஷ்ட ஈடாக ரூ. 1.10 கோடி வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், எடப்பாடி பழனிசாமியின் மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கையின்படி, இந்த வழக்கில் அவரைத் தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்குத் தடைவிதித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு ரூ. 1.10 கோடி மானநஷ்ட ஈடாக வழங்குமாறும் தனபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கொடநாடு வழக்கு: தலைமறைவான அதிமுக நிர்வாகி சஜீவன் ஆஜராக சிபிசிஐடி சம்மன்; காவல்துறை சொல்வதென்ன?



.

Previous Post

விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படும் போது மட்டுமே வைஃபை சேவை பயன்படுத்த முடியும்! | Indian government issues advisory for In-flights Wi-Fi services

Next Post

டெங்கு பாதிப்பால் 8 பேர் பலி: தமிழக அரசு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெங்கு பாதிப்பால் 8 பேர் பலி: தமிழக அரசு

டெங்கு பாதிப்பால் 8 பேர் பலி: தமிழக அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In