கோவையில் கடந்த செவ்வாய்கிழமை இரண்டு அரசு விழாக்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த இரு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னாள் ஆளுநரும் பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ் தாய் வாழ்த்து பாடுவதையே குறைப்பது நியாயமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
