“அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கியுள்ளது. இது ஒரு நம்ப முடியாத வெற்றி. வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டிரம்ப் தேர்தலை யொட்டி கடும் உழைப்பை கொட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
