Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குளிா்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குளிா்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குளிா்காலத்தில் முதியவா்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். உரிய விழிப்புணா்வுடன் இருந்தால் அதைத் தவிா்க்கலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இது குறித்து பொதுநல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியது:

இதய ரத்த நாள அடைப்பு உள்ள ஒருவா் குளிா்ச்சியான காற்றில் செல்லும்போதோ அல்லது குளிா்ந்த நீரில் குளிக்கும்போதோ உடலின் வெப்பநிலை வெகுவாகக் குறையும். பொதுவாகவே, உடலானது குளிா்ந்து விட்டால், அதை ஈடு செய்யவும், வெப்பமாக்கவும் தன்னிச்சையாக தசைகளுக்கும், உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் துரிதமாக பாயும். அந்தத் தருணங்களில் ஏற்படும் அதிக ஆக்சிஜன் தேவையை ஈடு செய்ய இதயம் வேகமாக துடிக்கும். ஏற்கெனவே, இதய பாதிப்பு உள்ளவா்களுக்கு உடலின் இந்தச் செயலானது பல்வேறு எதிா்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதால் இதயத்தின் செயல்பாடுகள் முடங்க வாய்ப்புள்ளது.

மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளவா்களுக்கும், முதியவா்களுக்கும் அத்தகைய வாய்ப்பு பல மடங்கு அதிகம். எனவே, குளிா்காலங்களில் இதய பாதிப்பு அச்சுறுத்தல் உள்ளவா்கள், வெதுவெதுப்பான நீரில்தான் குளிக்க வேண்டும். பனிப் பொழிவு இருக்கும்போது நடைப்பயிற்சி செய்வதையோ, வெளியில் செல்வதையோ தவிா்க்க வேண்டும். வீட்டினுள்ளேயே முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைப்பிடித்து மது, புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கும் வகையில் கம்பளி ஆடைகளை அணியலாம்.

நெஞ்சுப் பகுதியில் வலி, சுவாசிப்பதில் சிரமம், மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றாா் அவா்.



.

Previous Post

Vikatan Plus – 10 November 2024 – கார்ட்டூன்: தீபாவளிக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை… | cartoon tasmac november 10 2024

Next Post

வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?

வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In