பயங்கரவாதிகளை கொல்லக்கூடாது, அவர்களை உயிருடன் பிடித்து விசாரிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில்,
‘ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுடுவதற்குப் பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும்.
பிடிபட்ட பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிடும் பயங்கரவாதக் குழுக்களைக் கண்டறியலாம். அவர்களின் நெட்ஒர்க் குறித்த தகவல்கள் கிடைக்கும்’ என்றார்.
