இவை இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவயாக இருக்கின்றன. எடையைக் கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும் சைவ உணவுகள் உதவுகின்றன. இருப்பினும், சைவ உணவு உண்பவர்கள் B12, இரும்பு மற்றும் ஒமேகா-3 போன்ற சில ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால் இந்த சத்துக்கள் மாமிசங்கள்,விலங்கு பொருட்களில் ஏராளமாக உள்ளன. மேலும் செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் கூடுதல் பொருட்களிலும் காணப்படுகின்றன.
