Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: "தொடக்க உரையிலேயே விஜய் தோல்வி…" – தமிமுன் அன்சாரியின் விமர்சனத்திற்குக் காரணம் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: "தொடக்க உரையிலேயே விஜய் தோல்வி…" – தமிமுன் அன்சாரியின் விமர்சனத்திற்குக் காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, “பாசிசமா ? பாயசமா ? என்று தொடக்க உரையிலேயே தோல்வியைச் சந்தித்திருக்கிறார் விஜய்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அரசியல் பணியாற்றிட வரும் அனைவருக்கும் ஜனநாயக நாட்டில் முழு சுதந்திரம் இருக்கிறது. அதேசமயம் அதை விமர்சிப்பதற்கும் ஜனநாயகம் அனுமதிக்கிறது. விஜய் அவர்கள் அரசியலைப் பாம்புடன் ஒப்பிட்டு இருக்கிறார். அரசியல் என்பது மக்களாட்சி தத்துவத்தை நிர்வாக மையப்படுத்தி, மக்களுக்குச் சேவையாற்றும் உன்னதமான களமாகும். அதனைச் சிறுமைப்படுத்திடும் வகையில் அவர் பேசியதை ஏற்க முடியவில்லை. காந்தியார் முதல் நெல்சன் மண்டேலா வரை அனைவரும் அரசியலை அவ்வாறு நேர்மறையாகக் கருதித்தான், தங்களை அதில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

TVK Vijay

அரசியல் என்பது மூன்று மணி நேரத் திரைப்பட படப் பிடிப்பு அல்ல. அது அன்றாட நிகழ்வுகளையும், அதன் எதிரொலிகளையும் வெளிப்படுத்தும் துடிப்பு மிக்க களம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் தனது மேடையை அரசியல் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படுத்தினாரா ? அல்லது திறந்தவெளி திரையரங்கமாக அதை மாற்றினாரா? என்ற விமர்சனத்துக்குள் நாங்கள் நுழையவில்லை. பாசிசம் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்தும், பேசிய தொனியும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அவருக்கு உணர்த்த விரும்புகிறோம்.

பாசிச எதிர்ப்பு என்பது இந்தியாவின் முதன்மையான அரசியலாக மாறியிருக்கிறது. ஏனெனில் பாசிசம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மனிதாபிமானத்துக்கு எதிரானது. சகோதரத்துவத்திற்கு எதிரானது. இந்த பாசிசம்தான் இந்தியாவில் மதக்கலவரங்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் குடித்தது. பாபர் மசூதியை இடித்தது. பல இடங்களில் தேவாலயங்களை எரித்தது. ஒரிசாவில் பாதிரியார் கிரகம் ஸ்டையின்சையும், அவரது பச்சிளம் பிள்ளைகளையும் உயிரோடு தீ வைத்து எரித்தது.

TVK Vijay

இப்போதும் இந்தியாவை அதுதான் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் பாரம்பரியத்தை நிலைகுலையச் செய்தது இந்த பாசிசம்தான். இதனைப் பற்றி அவரது தந்தை இயக்குநர் திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். இந்நிலையில் மேடையில் நக்கலும், நையாண்டியுமாகப் பாசிசமா? பாயாசமா ? எனக் கேலி பேசி இருக்கிறார். இதை அவ்வளவு எளிதில் கடந்து போய் விட முடியாது.

அங்குத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தனது ரசிகர்களுக்கு – தொண்டர்களுக்கு மத்தியில், பாசிசத்தைச் சாதாரண ஒன்றாக அவர் சித்தரித்து இருக்கிறார். திராவிட அரசியலைப் பற்றிப் பேசும்போது சுத்தியலைத் தூக்கியவர், பாசிச அரசியலைக் குறிப்பிடும்போது தென்னை மட்டையைத் தூக்கிக்காட்டி விட்டு சாதாரணமாகக் கடந்து போகிறார். திராவிட மாடல் அரசு எனத் தாளில் எழுதி வைத்ததைப் படித்து கடுமையாகத் தாக்கியவர், அதே கடுமையை ஏன் ஃபாசிஸ்ட்கள் மேல் காட்டவில்லை? இவரது அரசியல் வருகை என்பது யாருடைய பின்னணியில் வலுவூட்டப்படுகிறது என்பதை விரிவாக விவாதிக்க வேண்டி இருக்கிறது.

தமிமுன் அன்சாரி

தனது துவக்க உரையில் தொண்டர்களுக்கு அவர் எழுச்சியை ஏற்படுத்தியதாகக் கருதலாம். ஆனால் அரசியல் ரீதியாகவும், கருத்தில் ரீதியாகவும் அவர் முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறார் என்பதுதான் உண்மை . நாட்டு மக்கள் பாசிசத்திற்கு எதிராக அணிதிரண்டு வரும் நிலையில்; தமிழ்நாட்டு மக்கள் இதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் நிலையில், விஜய் அவர்களின் கருத்து தொடக்கத்திலேயே அவருக்குச் சறுக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

காஸா நிவாரணப் பணிகளை இஸ்ரேல் கையிலெடுக்க வேண்டும்: ஐ.நா.

Next Post

3 வீரா்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 வீரா்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

3 வீரா்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In