Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: "விஜய் ரசிகர்களே எனக்குத்தான் வாக்களிப்பார்கள்'' – தவெக மாநாடு குறித்து சீமான் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: "விஜய் ரசிகர்களே எனக்குத்தான் வாக்களிப்பார்கள்'' – தவெக மாநாடு குறித்து சீமான் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (அக்டோபர் 29) தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்காமல், வெறுமனே தீபாவளி வாழ்த்துகள் மட்டும் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க., ஒரு தேவையில்லாத கட்சி.

சீமான்

நீட், ஜி.எஸ்.டி, உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். அதற்குத் துணையாக இருந்தது தி.மு.க. அதற்கடுத்ததாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி அந்த திட்டங்களை எல்லாம் வளர்த்து வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை என் இனத்தின் எதிரி – காங்கிரஸ். பா.ஜ.க மானுட குலத்தின் எதிரி.

எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவர்களது ரசிகர்களைச் சந்தித்துத்தான் அரசியலுக்கு வந்தனர். ஆனால் திரைத்துறையிலிருந்து வந்த நான் மக்களைச் சந்தித்து அரசியலுக்கு வந்தேன். பொதுவாக ஒரு நடிகரைப் பார்ப்பதற்காகக் கூட்டம் அதிகளவு வரும். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். மேலும், விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. ஏனென்றால் விஜய்யின் ரசிகர்களே எனக்குத் தான் வாக்களிப்பார்கள்.

சீமான்

மேலும் கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை விஜய்யின் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது அவரவரது விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

மாரி செல்வராஜ் தந்தையின் கதை..! கார்த்தியின் புதிய பட அப்டேட்!

Next Post

விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டம்!

விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In