Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பக்ரீத் அன்றும் வரச் சொல்றாங்க.. முதல்வர் ஆக்‌ஷன் எடுக்கணும்.. கோரிக்கை வைத்த நெல்லை முபாரக்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 27, 2023
in அரசியல் செய்திகள்
1
பக்ரீத் அன்றும் வரச் சொல்றாங்க.. முதல்வர் ஆக்‌ஷன் எடுக்கணும்.. கோரிக்கை வைத்த நெல்லை முபாரக்!
26
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Vignesh Selvaraj
Published: Tuesday, June 27, 2023, 21:52 [IST]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை நாளன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வரவேண்டும் என்று நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (ஜூன் 29) கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பி வர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை அன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தரவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், “பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு பெருநாள் விடுமுறையன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தர நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே! உடன் மேற்கண்ட உத்தரவை ரத்து செய்!” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நாளை (ஜூன் 28) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் அளிக்க உள்ளார். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடும் எதிர்ப்பு.. கறுப்பு நிற ஆடை அணியக்கூடாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது சேலம் பெரியார் பல்கலை! இதனை காரணமாக வைத்து, பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் மாணவர்கள் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த அறிவிப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை நாளன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருமாறு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளதைக் குறிப்பிட்டு, இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் நெல்லை முபாரக்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
SDPI leader Nellai Mubarak has requested CM Stalin that Salem Periyar University management asked to come to to correct the answer sheet even on Bakrit holiday and the CM should intervene in this matter.
Story first published: Tuesday, June 27, 2023, 21:52 [IST]

.

Previous Post

கோயில் ‘முதல் மரியாதை’க்கு மோதல்: மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக கிளை செயலர் உட்பட 6 பேர் கைது

Next Post

பொது சிவில் சட்டம்: “வாக்கு வங்கிப் பசியால் எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன!" – மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொது சிவில் சட்டம்: ``வாக்கு வங்கிப் பசியால் எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன!" - மோடி

பொது சிவில் சட்டம்: ``வாக்கு வங்கிப் பசியால் எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன!" - மோடி

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    முஸ்லிம்கள்தான் ரொம்ப தொல்லை பண்றாங்க முஸ்லிமா யாருமே தொல்லை பண்ணல

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In