ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) இணைந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், உளகளவில் 112 நாடுகளில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான அந்த ஆய்வறிக்கையில், “உலகளவில் வாழும் சுமார் 600 கோடி மக்கள் தொகையில், 100 கோடி மக்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர். மேலும், இவர்கள் சார்ந்த குடும்பம் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவை உள்ளிட்ட10 குறியீடுகளில் ஏதேனும் ஒன்றில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
