Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2024
in அரசியல் செய்திகள்
0
தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலம்தான் தற்போது அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “கடந்த ஆறு வருடங்களாக இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது. ஆனால் கட்டி முடித்ததிலிருந்து பாலத்தில் தண்ணீர் கசிந்து கொண்டு தேங்கியபடியே இருக்கின்றது. மேலும் தரைப்பாலத்தில் உயரம் குறைவாக இருப்பதால் பேருந்துகள் பாலத்தின் வழியாக செல்வது சிரமமாக உள்ளது. அதுவும் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவு கசிந்து தேங்கி நிற்கிறது. அதனால் சாலையும் அதிகமாக பாசனம் பிடித்துவிட்டது. குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து விட்டது” என்கிறார்கள்.

மழைக்காலங்களில் அந்த குழிகளும் நிரம்பி விடுவதால் அதிக மக்கள் அங்கே தவறி விழுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இது தரைப்பாலமா அல்லது ட்ரைனேஜா என்று மக்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.

இப்படி எந்நேரமும் தண்ணீர் அங்கு தேங்கி நிற்பதால், பாசி படர்ந்து காணப்படுகிறது. சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து, காயமடையும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்த தரைப்பாலத்தை பயன்படுத்துவது ஆபத்தானது என்ற போதிலும், மாற்றுப் பாதையில் செல்ல வெகு நேரம் தேவைப்படுவதால், இதுதான் மக்களுக்கு ஏதுவானதாக இருக்கும். பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு ஓராண்டுகூட ஆகாத நிலையில், அடிக்கடி தண்ணீர் கசிந்து தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அதனால் பல சமயம் இந்த தரைப்பால போக்குவரத்து முடக்கப்படுவதும் உண்டு. இருந்தபோதிலும், காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், இதை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

மக்களின் சிரமத்தை குறைக்க கட்டப்பட்ட தரைப்பாலமே, தற்போது மக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அரசானது உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்த தரைப்பாலத்தை சரி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பிரமாண்ட தூய வெள்ளி அலமாரி; பாரம்பரிய இந்திய ஓவிய பாணி – கின்னஸ் உலக சாதனை | Album



.

Previous Post

தமிழக ஆளுநர் ரவி மாற்றப்படுகிறாரா? – சலசலப்பும் உண்மை நிலையும்! | Is Tamil Nadu Governor change? – Hustle and Reality!

Next Post

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! – சீரமைப்பார்களா அதிகாரிகள்? | unhygienic state of tirupattur old bus stand

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! – சீரமைப்பார்களா அதிகாரிகள்? | unhygienic state of tirupattur old bus stand

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! - சீரமைப்பார்களா அதிகாரிகள்? | unhygienic state of tirupattur old bus stand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In